SHARE

வடக்கில் இருந்து  இராணுவமுகாம்கள் எதுவும் அகற்றப்படவில்லை என்றும்,  நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலையெடுப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் உறுதி அளித்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா.

Chrisanthe-de-Silva

கண்டியில் நேற்று மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்ற பின்னரே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”இன்று நாட்டின்  பாதுகாப்புத் தான் சூடான விவகாரமாக மாறியிருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பு முறைக்கு ஆபத்தை ஏற்படுத்தும், எதனையும் மேற்கொள்வதற்கு சிறிலங்கா இராணுவம் இடமளிக்காது.

வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் படையினர் குறைக்கப்பட்டுள்ளதாகவும் சில தரப்பினரால், சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் கிடையாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email