SHARE

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­தரும் அடக்கு முறைக்கு எதி­ரான தலை­வ­ரு­மான மு.தம்­பி­ரா­ஜாவின் மக­னான திரு­வ­ளவன் தம்­பி­ராஜா கடந்த 23 ஆம் திக­தி­யி­லி­ருந்து காணாமல் போயுள்­ள­தாக அவ­ரது தந்தை யாழ். பொலிஸ்­ நி­லை­யத்தில் முறை­யிட்­டுள்ளார்.

Jaffna_mapயாழ். கந்­தப்ப சேகரம் வீதியில் அமைந்­துள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் இருந்த சம­யமே அவ­ரது மக­னான திரு­வ­ளவன் தம்­பி­ராஜா (19) காணாமல் போயுள்ளார்.

பிற்­பகல் 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்­பட்ட வேளை­யி­லேயே இவர் காணாமல் போயுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் தம்­பி­ராஜா தெரி­விக்­கையில்

எனது மகன் அண்­மை­யி­லேயே லண்­டனில் இருந்து இங்கு வந்­தி­ருந்தார். அவரை நான் எனது அலு­வ­ல­கத்தில் விட்­டு­விட்டு தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களின் பொருட்டு வெ ளியில் சென்­றி­ருந்தேன். மகன் தனி­மை­யி­லேயே அலு­வ­ல­கத்தில் இருந்தார். நான் 3 மணி­ய­ளவில் அலு­வ­ல­கத்­துக்கு வந்து பார்க்­கையில் அவரைக் காண­வில்லை. அவ­ரது கைக்­க­டி­காரம் கைய­டக்கத் தொலை­பேசி மடிக்­க­ணனி என்­பன அங்­கேயே காணப்­பட்­டன. இதனால் அவர் கடத்­தப்­பட்­டி­ருக்­கலாம் என்றே நான் கரு­து­கிறேன். இந்­நி­லையில் 7 மணி­வரை தேடிப்­பார்த்து விட்டுப் பின்னர் யாழ். பொலி­ஸா­ரிடம் முறை­யிட்டேன்.

தனது மகன் மிகவும் அப்­பாவி அவ­ருக்கு யாழ். நிலை­மைகள் தொடர்பில் எதுவும் தெரி­யாது. அவர் தனது கல்வி நட­வ­டிக்­கை­களைத் தொட­ரவே இங்கு வந்­தி­ருந்தார். இதனால் எனது மனை­வியும் மிகுந்த வேத­னைக்கு ஆளா­கி­யுள்ளார். எனவே அவரை யாரா­வது கடத்­தி­யி­ருந்தால் உட­ன­டி­யாக விடு­தலை செய்­யு­மாறு கோரு­கின்றேன் எனத் தெரி­வித்தார்.

மேலும் எனது அர­சியல் எதி­ரிகள் இதில் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கலாம் எனச் சந்­தே­கிப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்தார். சந்­தே­கத்­திற்­கி­ட­மான மூவரின் பெயர்களையும் யாழ். பொலிஸாருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்தக் கடத்தல் தொடர்பில் யாழ். பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரியவருகின்றது.

Print Friendly, PDF & Email