SHARE

சிரேஷ்ட மனித உரிமைகள் சட்டத்தரணியும் முன்னாள் யாழ் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமாகிய அப்பாதுரை விநாயகமூர்த்தி அவர்கள்  இன்று கொழும்பில் காலமானார். சுகவீனம் காரணமாக தனியார்  வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று இயற்கை  எய்தினார்.

ஜி ஜி பொன்னம்பலம் அவர்களுடன் இணைந்து அகில இலங்கை தமிழ்  காங்கிரஸ் ஊடாக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர் பின்னர்  குமார் பொன்னம்பலத்துடன் இணைந்து செயற்பட்டார். தமிழீழ விடுதலை  புலிகளின் அரசியல் சித்தாந்தத்தை முழுமையாக ஏற்பதாக பகிரங்கமாக  அறிவித்த அவர் தமிழ் தேசியத்தின்பால் பற்றுறுதியுடன் செயற்பட்டவராவார்.  குமார் பொன்னம்பலத்தின் மறைவின் பின்னர் அகில இலங்கை தமிழ்  காங்கிரசின் தலைமை பொறுப்பை ஏற்ற அவர், 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற  பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக  போட்டியிட்டு அமோக வெற்றியீட்டினார். 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசிய  கூட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்னின்று செயற்பட்ட அவர் அதன்  பிரதித்தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டு வரை யாழ்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். கொழும்பு  பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை பூர்த்திசெய்த அவர் குமார்  பொன்னம்பலத்துடன் இணைந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக  பாடுபட்டார். அவர் இலவசமாகவே தமிழ் கைதிகளின் வழக்குகளில்  ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Print Friendly, PDF & Email