SHARE

காணமல் போனோர் பணியகத்தின் 7 உறுப்பினர்கள் நியமணத்தில் இராணுவப்பிரதிநிதிக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை இப்பணியகத்தின் தலைவராக அதிபர் சட்டவாளர் சாலிய பீரிஸ் செயலாற்றவுள்ளார்.

காணாமல் போனோர் பணியகத்தின் 7 உறுப்பினர்கள் நியமணங்களுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அங்கீகாரம் அளித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்ட அவர், அச்செயலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் செயற்படுவார் எனவும் ஏனைய 6 உறுப்பினர்களும் அவருடன் இணைந்து பணியாற்றுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பணியகத்தின் ஏனைய உறுப்பினர்களாக ஜெகதீபா புண்ணியமூர்த்தி, கணபதிப்பிள்ளை வேந்தன், மேஜர் ஜெனரல் மொஹந்தி அன்ரோனெட் பீரிஸ், கலாநிதி சிறியானி நிமல்கா பெர்னாண்டோ, மிராக் ரக்கீம் மற்றும் சுமனசிறி லியனகே ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இவ் உறுப்பினர்களில் மேஜர் ஜெனரல் மொஹந்தி அன்ரோனெட் பீரிஸ் இங்கை இராணுவத்தின் சட்டப்பிரிவு பணிப்பாளராக இருந்தவர் எனவும் அவரது கணவர் பசீல் பீரிஸ் இராணுவத்தின் வரவு செலவு திட்ட மற்றும் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளராக செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email