SHARE

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த இலங்கை தொடர்பான முக்கிய விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜெனிவா ஐ.நா. அலுவலகத்திலுள்ள ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமையே இந்த ரத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைத் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட பூகோள காலக்கிரம மீளாய்வு அறிக்கை மீதான விவாதமே ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதான நிகழ்வு இடம்பெறாத போதிலும், இன்றைய தினத்திற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஏனைய பக்க நிகழ்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் என மனித உரிமைகள் பேரவையின் பொது தகவல் அதிகாரி ரோலண்டோ கோமஸ் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email