SHARE
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள பட்டப்பகலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டியுள்ளனர்.
அதிர்ச்சியளிக்கும் இச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம் பகுதியில் இன்று (29) பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிள்களில் வந்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்கல், ஆசிரியையின் கூந்தலை பிடித்து வெட்டி கொடுமைப்படுத்தியதுடன், அவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். இவ்வேளையில் அதனைத் தடுக்கச் சென்ற ஆசிரியையின் தாயாரையும் குறித்த கும்பல் வாளால் வெட்டிக்காயப்படுத்தியதுவிட்டு தப்பிச் சென்றது.
பின்னர் இரத்த வெள்ளத்திலிருந்து இருவரும் அயலவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த நடன ஆசிரியை கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட தருமபுரம் பாடசாலையில் பணியாற்றி வருகிறார். பாடசாலை விடுமுறை நாளான இன்று வாள்வெட்டுக் கும்பல் பட்டப்பகலில் வீடு புகுந்து இந்த அட்டூழியத்தை செய்துள்ளது.
இதே வேளை, CCTV கமரா வில் குறித்த வாள் வெட்டு கும்பல் பதிவாகியுள்ளதால் அதன் உதவியுடன் வாள்வெட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்களை  பொலிசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சாவகச்சேரி மற்றும் கொக்குவில் இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரைக்கு எவரையும் கைது செய்யாததால் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலையங்களின் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விடுப்புகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என கடந்த வெள்ளிக்கிழமை (27) வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாந்து அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email