SHARE
ஊடகவியலாளர் மறைந்த கேலிச்சித்திரக் கலைஞர் அஸ்வின் சுதர்சனின் கேலிச்சித்திரங்களை ஆவணப்படுத்திய “கோடுகளால் பேசியவன்”  நூல் அறிமுக விழா எதிர்வரும் 9 ஆம் திகதி பிரித்தனியாவில் நடைபெறவுள்ளது.
தமிழ் தகவல் நடுவம் (TIC) பெருமையுடன் பிரித்தானியாவில் அறிமுகம் செய்யும் இந்நிகழ்வு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக் கழகத்தில் (University of Westminster Harrow Campus, Watford Road ,Northwick Park, HA1 3TP ) பி.ப 14.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரித்தானிய நாடளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh MP கலந்து கொள்ளவுளதுடன் சர்வதேச ஊகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்த பலர் பங்கேற்கவுள்ளனர்.
தமிழ் பத்திரிகைத் துறையில் கார்ட்டூனுக்கான தனி முத்திரையை பதித்தது மட்டுமல்லாது அதில் நவீனத்துவத்தை புகுத்திய அஸ்வினின் கேலிச்சித்திரங்கள் அரசியல் முதல் சமூகம் வரை இன்றும் தீர்க்கதரிசனம் பேசுபனவாக  உள்ளன.
இந்நிலையில் அரசியல் மட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட தீர்க்கதரிசன ஓவியன் அஸ்வினின்
காட்டூன்களை ஆவணப்படுத்தி ஊடக நண்பர்களால் இலங்கையில் வெளியிடப்பட்ட நூலினை தமிழ் தகவல் நடுவமும் பிரித்தானியாவில் அறிமுகம் செய்கிறது.
தொடர்ந்து தமிழ் ஊடகத்துறையில் குறித்த கலை மேலும் வளர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். நாட்டிலுள்ள வேறுபட்ட கலாச்சாரம் மற்றும் சமயம் சார்ந்த மக்களிடையே ஒரு புரிந்துணர்வையும் கருத்துப் பரிமாறலையும் கொண்டு வருவதற்கு கேலிச்சித்திரங்கள் முக்கிய கருவியாக இயங்க முடியும் என தமிழ் தகவல் நடுவம் நம்புகிறது.
Print Friendly, PDF & Email