SHARE

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் கிடப்பில் போடப்பட்ட சித்திரவதைகள் தொடர்பான ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் தொடர்பில் மீளாய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகள் பல ஆயிரக் கணக்ககில் ஆணைக்குழுவுக்கு கிடைத்தன. அவை ஏழு தொடக்கம் எட்டு ஆண்டுகள் கடந்தவை. சில அதற்கு மேற்பட்ட காலப் பகுதியைக் கொண்டவை என்று அவர் கொழும்பு ஆங்கில வார இதழான சண்டே ரைம்ஸுக்கு தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு வரை கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக் கோவைகள் ஆயிரக் கணக்கில் குவிந்துள்ளன. அலுவலகத்தை சுத்தப்படுத்த பணிக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்களால் அவை மீட்கப்பட்டுள்ளன. 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு ஆராய்ந்து வருகிறது.

காணாமல் ஆக்கப்படுதல், தடுப்புக் காவல் சித்திரவதை, தடுத்துவைத்தல் மற்றும் காரணமின்றிய கைதுகள் ஆகியன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் பெறப்படுகின்றன பொதுவான முறைப்பாடுகளாகும் காணாமற்போனோர் அலுவலகம் நிறுவப்பட்ட பின்னர், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் அந்த அலுவலகத்தால் விசாரணை நடத்தப்படும். எனினும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவே கையாளும் என்று கலாநிதி தீபிகா உடகம மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email